சரித்திரத்தில் இடம்பிடிக்கும் இரம்பொடைச் சுரங்கம்

மேற்படி சுரங்கப்பதை நிர்மானிப்புப் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளதுடன் இதுவே இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவதும் மிக நீண்டதுமான சுரங்கப்பாதையாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலையகப் பிரதேசத்தின் பாரிய வளைவுகளைக் கொண்டமைந்த கம்பளை – நுவரெலியா வீதியின் தூரம் 54 கிலோமீற்றராக விளங்குவதுடன் இதன் அகலம் சுமார் 3 கிலோமீற்றர்கள் மட்டுமே. இப்பாதை அகலப்படுத்தல் குறித்து சுமார் 4 வருடங்களுக்கு முன்னரே தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் இந் நிர்மானிப்புப் பணிகளுக்காக ஜப்பானின் உதவி வழங்கும் நிறுவனமொன்றினால் 2500 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிதி வழங்கல் நிகழ்வில் ஈடுபட்ட ஜப்பானின் பிரதான நிறுவனமாக ஜப்பான் பான்க் ஆப் இன்டர்நஷனல் கோபரேசன் (Japan Bank of international cooperation) ஆகும். இதற்கான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாக பசிபிக் கன்சல்டன்ட் இன்டர்நஷனல்(Pacific consultants International) ஈடுபட்டு வந்ததுடன் இதன் பிரதான நிர்மானிப்புப் பொறுப்புக்களை சீனத் துறைமுகப் பொறியியற் துறை நிறுவனம் பெற்றுள்ளது.
மேற்படி பாதையை அகலப்படுத்தும் போது இரம்பொடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாரிய கற்பாறையை அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. சுமார் 160 மீற்றர் நீளமான இக்கற்பாறையை அவ்விடத்திலிருந்து அகற்றுவதென்பது இயலாத காரியமாக விளங்கியிருந்தது. இப்பாதையின் அகலம் 3 மீற்றர்களாக காணப்பட்டதால் இப்பாதையினூடாக ஒரே ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய நிலைமை காணப்படுவதால் அப்பகுதியில் எந்நேரமும் வாகன நெரிசல் காணப்பட்ட வண்ணமே இருந்தது. இவ்வாகன நெரிசல் காணப்படுவதற்கான முக்கிய காரணம் அங்கு அமைந்திருக்கும் பாரிய கற்பாறையே ஆகும். இதனால் இப்பாதையை அகலப்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பாதையின் இடது புறமாகக் மேற்படி கற்பாறை காணப்படுவதுடன் பாதையின் வலதுபுறம் சுமார் 25 மீற்றர் நீளமான பள்ளத்தாக்கும் காணப்படுகிறது. இப்பாதையை அகலப்படுத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் பல்வேறுபட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவை பாதைக்கு சமாந்திரமாக பாலம் ஒன்றினை நிர்மானித்தல், வில் வடிவிலான பாலம் ஒன்றினை நிர்மானித்தல், வட்டவடிவிலான பாலம் ஒன்றை நிர்மானித்தல் மற்றும் சுரங்கப் பாதை ஒன்றை நிர்மானித்தல் போன்றனவே அவையாகும்.
இந்த யோசனைகள் குறித்து உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு பொறியியலாளர்களினால் நிர்மானிக்கப்பட்ட பல்வேறுபட்ட வடிவமைப்புக்குள் முன்வைக்கப்பட்டதுடன் அவற்றிலிருந்து மேற்படி சுரங்கப்பாதை நிர்மானிக்கும் முறையே தெரிவுசெய்யப்பட்டது.
மேற்படி இரம்பொடை சுரங்கப்பதை தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளரான எல்.எஸ்.வி.வீரக்கோன் தெரிவித்ததாவது:-
இப்பதையானது மிகவும் முக்கியமான பாதையாக விளங்குவதுடன் அதனை அபிவிருத்தி செய்வது மிகவும் சிரமம் வாய்ந்ததாகவும் காணப்பட்டது. அதனால் நாம் இதனை புனரமைப்பதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கியதுடன் அதற்காகக் கிடைத்த முதலீட்டுக்கமையவும் வேலை செய்யவேண்டி ஏற்பட்டது. பல்வேறுபட்ட புதிய புனரமைப்பு நடவடிக்கைகளை நாம் கையாள எண்ணினோம். ஆயினும் அவ்வனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளிலும் இந்த சுரங்கப்பாதை அமைக்கும் முறையே சிறந்ததாகவும் அலாபகரமானதாகவும் கணிப்பிடப்பட்டது.
இரம்பொடைப் பாதையை அகலப்படுத்த எண்ணிய எமக்கு பாரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. அப்பகுதியில் இயற்கையாகவே அமைந்துள்ள பாரிய கற்பாறை காரணமாக அப்பாதையை அகலப்படுத்துவதற்காண சந்தர்ப்பம் குறைவாகவே கா
ணப்பட்டது. அதனால் நாம் தீர்மானித்தோம்.
இச்சுரங்கப்பதை நிர்மாணிப்புப் பணிகள் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. தற்பொழுது இந்நிர்மாணிப்புப் பணிகள் 99 வீதமளவில் முடிவடைந்துள்ளன.
இச்சுரங்கப்பாதையின் நீளம் 230 மீற்றர் ஆகும். சுரங்கத்தின் மத்தியப் பகுதியின் உயரம் சுமார் 6 மீற்றராகவும் காணப்படுகிறது. இச்சுரங்கப்பாதையை அமைக்கும் போது எமக்கு பாரிய சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை. காரணம் இதன் மொத்த நீளத்தில் 160 மீற்றர்களும் கருங்கற்பாறையாகக் காணப்பட்டதனால் அதனைக் குடைந்து அதனூடாக சுரங்கத்தை அமைப்பதில் சிரமம் ஏற்படவில்லை. எஞ்சிய 70 மீற்றர்கள் மட்டுமே சுரங்கம் அமைப்பதற்கான மண் பிரதேசமாகக் காணப்பட்டது. உண்மையில் நாம் இந்த கருங்கற்பாறையைக் குடைந்து சுரங்கம் அமைப்பதிலும் பார்க்க மண் பிரதேசத்தைக் கொண்டு சுரங்கம் அமைப்பதிலேயே சிரமம் ஏற்பட்டது.
இந்த சுரங்கப்பாதை அமைக்கும் போது அதனால் இப்பிரதேச மக்களுக்கோ அல்லது அப்பிரதேசத்தில் அமைந்துள்ள வீடுகள் அல்லது கட்டிடங்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை. நாம் இந்த கருங்கற் பாறையை உடைக்கும் கட்டுப்படுத்தப்பட்ட வெடி பொருட்களைக் கொண்டே அவற்றை வெடிக்கச் செய்தோம் அதனால் இந்நடவடிக்கையால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இப்புதிய நிர்மானிப்புப் பணிகள் எதிர்வரும் மாதக் காலப்பகுதியில் முடிவடைந்து விடும் அதன் பின்னர் மக்கள் எவ்விதச் சிரமங்களும் இன்றி இப்பாதையினூடாகப் போய்வரக் கூடியதாக இருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.
கம்பளையிலிருந்து நுவரெலியா செல்வதற்கான பாதையானது மிகவும் முக்கியமான பாதையாக விளங்குவதுடன் மிகவும் கரடுமுரடான பாதையாகவும் விளங்குகிறது. இதனை அகலப்படுத்துவதுடன் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவைக்கொண்டு இதன் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிர்மாணிப்பு நடவடிக்கைளின் பிரகாரம் கார்ப்பட் போடப்பட்ட பாதையொன்று நுவரெலியா வரை புனரமைக்கப்பட்டுள்ளது. இப்பதையின் ஆரம்பப் பகுதியான 16 கிலோமீற்றர்கள் 6 மீற்றர் அகலத்துடனும் எஞ்சிய பாதை ஏழரை மீற்றர் அகலத்துடனும் அமைக்கப்பட்டுள்ளதுடன் அப்பாதைக்கான கால்வாய்கள் மற்றும் மேற்படி பாதையிலிருந்து பள்ளத்தாக்கில் விழாமல் இருக்கும் வகையில் சீமெந்துக் கட்டுக்களும் பாதையின் சிற்சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பாதையின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 4 வருடங்கள் செலவாகியுள்ளதுடன் அதன் புனரமைப்பு நடவடிக்கைகள் 99 வீதமளவில் முடிவடைந்தும் விட்டன.
இந்த ரம்பொடை சுரங்கப்பாதையானது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன. துற்போது அதனுள் மின்விளக்குகளைப் பொருத்தி அப்பாதைக்கு கார்ப்பட் போடும் வேலை மட்டுமே எஞ்சியுள்ளது. இதுவரை இச்சுரங்கப்பாதையின் நிர்மாணிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 160 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதுடன் இதனூடாக இரு வாகனங்கள் கடந்து செல்லமுடியும். ஆத்துடன் கன்டர் ரக வாகனங்களும் இதனூடாகப் பயணிக்கக் கூடிய வகையில் இதன் நிர்மாணிப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சுரங்கப்பாதை நிர்மாணிப்புக்கள் மூலம் பல்வேறுபட்ட அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புதிய நிர்மாணிப்புத் திட்டமானது இலங்கையின் மேலும் பல சுரங்கப்பாதை நிர்மாணிப்புத் திட்டங்களுக்க வழிகாட்டியாக இருப்பதுடன் இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகளுக்காக அலங்கையின் பல நிறுவனங்களைச் சேர்ந்த பல ஊழியர்கள் தாமது பாரிய ஒத்துழைப்பை வழங்கினர்.
மேனகா மூக்காண்டி
பாரிய நிலப்பரப்புக்களில் அமைந்த பச்சைப்பசேளென்ற தேயிலைத் தோட்டங்களாலும் சிறு சிறு நீர்வீழ்ச்சிகளினாலும் பல வரணங்களில் அமைந்த பூக்கள் நிறைந்த பூங்கன்றுகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களினாலும் நிரம்பியிருக்கும் கம்பளை – நுவரெலியா பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பிரதேசமான இரம்பொடையில் காலத்தால் அழியாததும் சரித்திரத்தில் இடம்பிடிக்கக் கூடியதுமான நிர்மானிப்புத் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
கம்பளை மற்றும் நுவரெலியா ஆகிய இரு நகரங்களுக்கு இடைப்பட்ட பதையினை அகலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதை புனரமைப்பு நிகழ்வுக்கு இடையூராகக் காணப்படும் இரம்பொடைப் பிரதேச பாரிய கருங்கற் பாறைப் பகுதியில் சுரங்கப்பதை ஒன்றை அமைப்பதே நாம் குறிப்பிட்ட காலத்தால் அழியாத சரித்திர நிகழ்வாகும்.
கம்பளை மற்றும் நுவரெலியா ஆகிய இரு நகரங்களுக்கு இடைப்பட்ட பதையினை அகலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதை புனரமைப்பு நிகழ்வுக்கு இடையூராகக் காணப்படும் இரம்பொடைப் பிரதேச பாரிய கருங்கற் பாறைப் பகுதியில் சுரங்கப்பதை ஒன்றை அமைப்பதே நாம் குறிப்பிட்ட காலத்தால் அழியாத சரித்திர நிகழ்வாகும்.
மேற்படி சுரங்கப்பதை நிர்மானிப்புப் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளதுடன் இதுவே இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவதும் மிக நீண்டதுமான சுரங்கப்பாதையாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலையகப் பிரதேசத்தின் பாரிய வளைவுகளைக் கொண்டமைந்த கம்பளை – நுவரெலியா வீதியின் தூரம் 54 கிலோமீற்றராக விளங்குவதுடன் இதன் அகலம் சுமார் 3 கிலோமீற்றர்கள் மட்டுமே. இப்பாதை அகலப்படுத்தல் குறித்து சுமார் 4 வருடங்களுக்கு முன்னரே தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் இந் நிர்மானிப்புப் பணிகளுக்காக ஜப்பானின் உதவி வழங்கும் நிறுவனமொன்றினால் 2500 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிதி வழங்கல் நிகழ்வில் ஈடுபட்ட ஜப்பானின் பிரதான நிறுவனமாக ஜப்பான் பான்க் ஆப் இன்டர்நஷனல் கோபரேசன் (Japan Bank of international cooperation) ஆகும். இதற்கான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாக பசிபிக் கன்சல்டன்ட் இன்டர்நஷனல்(Pacific consultants International) ஈடுபட்டு வந்ததுடன் இதன் பிரதான நிர்மானிப்புப் பொறுப்புக்களை சீனத் துறைமுகப் பொறியியற் துறை நிறுவனம் பெற்றுள்ளது.
மேற்படி பாதையை அகலப்படுத்தும் போது இரம்பொடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாரிய கற்பாறையை அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. சுமார் 160 மீற்றர் நீளமான இக்கற்பாறையை அவ்விடத்திலிருந்து அகற்றுவதென்பது இயலாத காரியமாக விளங்கியிருந்தது. இப்பாதையின் அகலம் 3 மீற்றர்களாக காணப்பட்டதால் இப்பாதையினூடாக ஒரே ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய நிலைமை காணப்படுவதால் அப்பகுதியில் எந்நேரமும் வாகன நெரிசல் காணப்பட்ட வண்ணமே இருந்தது. இவ்வாகன நெரிசல் காணப்படுவதற்கான முக்கிய காரணம் அங்கு அமைந்திருக்கும் பாரிய கற்பாறையே ஆகும். இதனால் இப்பாதையை அகலப்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பாதையின் இடது புறமாகக் மேற்படி கற்பாறை காணப்படுவதுடன் பாதையின் வலதுபுறம் சுமார் 25 மீற்றர் நீளமான பள்ளத்தாக்கும் காணப்படுகிறது. இப்பாதையை அகலப்படுத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் பல்வேறுபட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவை பாதைக்கு சமாந்திரமாக பாலம் ஒன்றினை நிர்மானித்தல், வில் வடிவிலான பாலம் ஒன்றினை நிர்மானித்தல், வட்டவடிவிலான பாலம் ஒன்றை நிர்மானித்தல் மற்றும் சுரங்கப் பாதை ஒன்றை நிர்மானித்தல் போன்றனவே அவையாகும்.
இந்த யோசனைகள் குறித்து உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு பொறியியலாளர்களினால் நிர்மானிக்கப்பட்ட பல்வேறுபட்ட வடிவமைப்புக்குள் முன்வைக்கப்பட்டதுடன் அவற்றிலிருந்து மேற்படி சுரங்கப்பாதை நிர்மானிக்கும் முறையே தெரிவுசெய்யப்பட்டது.
மேற்படி இரம்பொடை சுரங்கப்பதை தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளரான எல்.எஸ்.வி.வீரக்கோன் தெரிவித்ததாவது:-
இப்பதையானது மிகவும் முக்கியமான பாதையாக விளங்குவதுடன் அதனை அபிவிருத்தி செய்வது மிகவும் சிரமம் வாய்ந்ததாகவும் காணப்பட்டது. அதனால் நாம் இதனை புனரமைப்பதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கியதுடன் அதற்காகக் கிடைத்த முதலீட்டுக்கமையவும் வேலை செய்யவேண்டி ஏற்பட்டது. பல்வேறுபட்ட புதிய புனரமைப்பு நடவடிக்கைகளை நாம் கையாள எண்ணினோம். ஆயினும் அவ்வனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளிலும் இந்த சுரங்கப்பாதை அமைக்கும் முறையே சிறந்ததாகவும் அலாபகரமானதாகவும் கணிப்பிடப்பட்டது.
இரம்பொடைப் பாதையை அகலப்படுத்த எண்ணிய எமக்கு பாரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. அப்பகுதியில் இயற்கையாகவே அமைந்துள்ள பாரிய கற்பாறை காரணமாக அப்பாதையை அகலப்படுத்துவதற்காண சந்தர்ப்பம் குறைவாகவே கா
அக்கற்பாறையினூடாக சுரங்கப்பாதை ஒன்றை அமைத்து எமக்கு ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கு. மேற்படி சுரங்கப்பாதையை அமைப்பதற்கு முன்னர் இப்பாதையை அகலப்படுத்துவதற்கான மாற்றுவழிகள் ஏதும் உள்ளதா என்று நாம் யோசித்துப் பார்த்தோம். வேறு முறையில் பாலங்கள் அமைத்து இப்பிரச்சினைக்கான தீர்வைக் காண எண்ணிய எமக்கு அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அமையவில்லை. அதே போல் பாலம் அமைப்பதற்கான செலவும் சுரங்கப்பதை அமைப்பதற்கான செலவை விட அதிகமாகவே காணப்படுவதாக கணிக்கப்பட்டது.
இச்சுரங்கப்பதை நிர்மாணிப்புப் பணிகள் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. தற்பொழுது இந்நிர்மாணிப்புப் பணிகள் 99 வீதமளவில் முடிவடைந்துள்ளன.
இச்சுரங்கப்பாதையின் நீளம் 230 மீற்றர் ஆகும். சுரங்கத்தின் மத்தியப் பகுதியின் உயரம் சுமார் 6 மீற்றராகவும் காணப்படுகிறது. இச்சுரங்கப்பாதையை அமைக்கும் போது எமக்கு பாரிய சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை. காரணம் இதன் மொத்த நீளத்தில் 160 மீற்றர்களும் கருங்கற்பாறையாகக் காணப்பட்டதனால் அதனைக் குடைந்து அதனூடாக சுரங்கத்தை அமைப்பதில் சிரமம் ஏற்படவில்லை. எஞ்சிய 70 மீற்றர்கள் மட்டுமே சுரங்கம் அமைப்பதற்கான மண் பிரதேசமாகக் காணப்பட்டது. உண்மையில் நாம் இந்த கருங்கற்பாறையைக் குடைந்து சுரங்கம் அமைப்பதிலும் பார்க்க மண் பிரதேசத்தைக் கொண்டு சுரங்கம் அமைப்பதிலேயே சிரமம் ஏற்பட்டது.
இந்த சுரங்கப்பாதை அமைக்கும் போது அதனால் இப்பிரதேச மக்களுக்கோ அல்லது அப்பிரதேசத்தில் அமைந்துள்ள வீடுகள் அல்லது கட்டிடங்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை. நாம் இந்த கருங்கற் பாறையை உடைக்கும் கட்டுப்படுத்தப்பட்ட வெடி பொருட்களைக் கொண்டே அவற்றை வெடிக்கச் செய்தோம் அதனால் இந்நடவடிக்கையால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இப்புதிய நிர்மானிப்புப் பணிகள் எதிர்வரும் மாதக் காலப்பகுதியில் முடிவடைந்து விடும் அதன் பின்னர் மக்கள் எவ்விதச் சிரமங்களும் இன்றி இப்பாதையினூடாகப் போய்வரக் கூடியதாக இருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.
மேற்படி சுரங்கப்பாதை நிரமாணிப்பு தொடர்பாக அப்பாதையினூடாகப் பயணிக்கும் கம்பளை –நுவரெலியாவுக்கான பஸ் ஓட்டுனர் சுனில் ரத்னாயக்க தெரிவிக்கையில்:-
இப்பாதையினூடாகப் பயணிக்க வழமையா எங்களுக்க மூன்றரை மணித்தியாலங்கள் வரை எடுக்கும். ஈந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுவதால் எமக்கு சுமார் இரண்டரை மணித்தியாலங்களில் போய்ச் சேர முடியும். மற்றையது சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட வளைவினூடாகப் ஒரே தடைவையில் இரண்டு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலையும் எமக்கு ஏற்பட்டிருந்தது. ஆயினும் தற்போது அந்நிலை காணப்படுவதில்லை. இவ்வாறான திட்டமொன்றினை வீதி அபிவிருத்தி அதிகார சபை கொண்டுவந்ததையிட்டு நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றோம் என்று அவர் தெரிவிக்
கிறார்.
இச்சுரங்கப்பாதையின் நிர்மாணிப்புப் பணிகள் தொடர்பாக அதன் பிரதான பொறியியலாளர் டென்சில் அபொன்சு தெரிவிக்கையில் :-
கம்பளையிலிருந்து நுவரெலியா செல்வதற்கான பாதையானது மிகவும் முக்கியமான பாதையாக விளங்குவதுடன் மிகவும் கரடுமுரடான பாதையாகவும் விளங்குகிறது. இதனை அகலப்படுத்துவதுடன் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவைக்கொண்டு இதன் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிர்மாணிப்பு நடவடிக்கைளின் பிரகாரம் கார்ப்பட் போடப்பட்ட பாதையொன்று நுவரெலியா வரை புனரமைக்கப்பட்டுள்ளது. இப்பதையின் ஆரம்பப் பகுதியான 16 கிலோமீற்றர்கள் 6 மீற்றர் அகலத்துடனும் எஞ்சிய பாதை ஏழரை மீற்றர் அகலத்துடனும் அமைக்கப்பட்டுள்ளதுடன் அப்பாதைக்கான கால்வாய்கள் மற்றும் மேற்படி பாதையிலிருந்து பள்ளத்தாக்கில் விழாமல் இருக்கும் வகையில் சீமெந்துக் கட்டுக்களும் பாதையின் சிற்சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பாதையின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 4 வருடங்கள் செலவாகியுள்ளதுடன் அதன் புனரமைப்பு நடவடிக்கைகள் 99 வீதமளவில் முடிவடைந்தும் விட்டன.
இந்த ரம்பொடை சுரங்கப்பாதையானது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன. துற்போது அதனுள் மின்விளக்குகளைப் பொருத்தி அப்பாதைக்கு கார்ப்பட் போடும் வேலை மட்டுமே எஞ்சியுள்ளது. இதுவரை இச்சுரங்கப்பாதையின் நிர்மாணிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 160 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதுடன் இதனூடாக இரு வாகனங்கள் கடந்து செல்லமுடியும். ஆத்துடன் கன்டர் ரக வாகனங்களும் இதனூடாகப் பயணிக்கக் கூடிய வகையில் இதன் நிர்மாணிப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சுரங்கப்பாதை நிர்மாணிப்புக்கள் மூலம் பல்வேறுபட்ட அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புதிய நிர்மாணிப்புத் திட்டமானது இலங்கையின் மேலும் பல சுரங்கப்பாதை நிர்மாணிப்புத் திட்டங்களுக்க வழிகாட்டியாக இருப்பதுடன் இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகளுக்காக அலங்கையின் பல நிறுவனங்களைச் சேர்ந்த பல ஊழியர்கள் தாமது பாரிய ஒத்துழைப்பை வழங்கினர்.
No comments:
Post a Comment