மொரட்டுவை, முத்துவளி வீதி, இல:-31ரி இல் வசிக்கும் என்.டப் ளியூ பெனடிக் சில்வாவின்; வீடு சுனாமியால் பாதிக்கப்பட்டது. இதற் ;காக அரசினால் வழங்கப்படும் உதவித் தொகை (வீடொன்றை நிர்மாணிப்பதற்காக) இதுவரையில் அவருக்கு வழங்கப்படவில்லை. அதனால் உங்கள் அவதானத்தை குறிப்பிட்ட நபர் மீது செலுத்துமா றும் அவருக்குரிய உதவிகளை உடனடியாக வழங்குமாறும் கேட்கி றேன்.
இங்ஙனம்,
உண்மையுள்ள,
டொனல்ட் அபேசுந்தர.

இப்படியொரு கடிதம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவு மாறு கோரி மேல்மாகாண முதல மைச்சரின் செயலாளரினால் மொர ட்டுவை பிரதேச செயலாளருக்கு எழுதப்பட்டது. இது 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திக தி எழுதப்பட்டுள்ளது. இக்கடிதம் எ ழுதப்பட்டு சுமார் ஒரு வருட கால மாகின்ற போதிலும் முதலமைச்சின் செயலாளரின் வேண்டுகோள் இது வரையில் நிறைவேற்றப்படவில்லை. எனதெரிகிறது.
பெனடிக் சில்வாவிற்;கு உதவுமாறு கோரி முதலமைச்சின் செயலாளர் மட்டுமன்றி பாராளுமன்ற அலுவல் கள் அமைச்சின் செயலாளர், இல ங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப் பினர்கள், மொரட்டுவை மாநகர சபை மேயர், கட்டுகுருந்த கிராம சேவகர் போன்றோரினாலும் மேற் படி பிரதேச செயலாளருக்கு கடிதங் கள் எழுதப்பட்டுள்ளதுடன் அவர் உண்மையிலேயே சுனாமியால் பா திக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சகல ஆதாரங்களையும் பெனடிக் வைத்திருக்கிறார். இக்கடி தங்கள் மட்டுமன்றி அவரின் வாக் காளர் அட்டை, பதிவுத் திருமணப் பத்திரம் போன்றனவும் அவரது பதி வை உறுதிப்படுத்துகின்றன. இவை அனைத்தும் இருந்த போதிலும் பெனடிக்குக்குக்கான சுனாமி ஆதா ரங்கள் எதுவும் குறி;ப்பிட்ட இம்மூன்று வருடங்களுள் கிடைக்க வில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு அரசாங்கத்தால் 7இலட்சத்து 50ஆயிரம் ரூபா வழ ங்கப்படுமென சுனாமி ஏற்பட்ட கால த்திலேயே ஜனாதிபதியால் அறிவிக் கப்பட்டது. இவற்றில் 250,000 ஆயி ரம் ரூபா அரச சார்பற்ற நிறுவனங் களின் உதவியுடனேயே அரசாங்க த்தால் வழங்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்ட எவ்வித பண உத விகளும் இதுவரையில் பெனடிக் குக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து அப்பிரதேச கிராம சேவ கரிடமும் பிரதேச சபை அதிகாரி யிடமும் கேட்டபோது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கு வதற்காக வழங்கப்பட்ட பணம் அனைத்தும் முடிவடைந்து விட்ட தாக தெரிவிக்கின்றனர். பெனடிக் மட்டுமல்ல. சுனாமியால் பாதிக்கப் பட்ட பலரின் நிலமைகளும் இப்ப டித்தானிருக்கின்றன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்களில் இன்னமும் குறி ப்பிட்ட சிலர் முகாம்களிலேயே தங்கியிருக்கின்றனர். “சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு கள் அமைத்துக்கொடுக்கப்படும், அதுவரையில் நீங்கள் தற்காலிக குடியேற்றங்களிலேயே தங்கியிரு ங்கள”; என்று கூறிய அரசாங்கம் சுனாமி ஏற்பட்டு 3 வருடங்களாகி ன்ற போதிலும் இதுவரையில் அம்ம க்களின் பிரச்சினைகள் தீரும் வகை யிலான நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டதாகத் தெரியவில்லை.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு கிடைத்த பணம் மற்றும் பொருள் உதவிகள் எங்கே?என்ற கேள்வி தொடர்ந்தவண்ணமே உள் ளது. மேற்குறிப்பிட்ட பெனடிக்கின் பிரச்சினை ஒருவகை என்றால் தெ ஹிவளை, ஓபன் பெதெசவில் வசி த்து வரும் விதானகே சம்பத் பர் ணாந்து வேறுவகையிலான பிரச்சி னையை சந்தித்துள்ளார். அதாவது அரசினால் வழங்கப்படுவதாக கூறப் பட்ட 750,000 ரூபாவில் முதல் 250,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு அலுபோமுள்ள எனும் பிரதேசத்தில் நிலமொன் றைக் கொள்வனவு செய்துள்ள இவர் வீட்டை நிர்மாணிப்பதற்காக எஞ்சிய பணத்தைக் கேட்டு கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரிடம் சென்ற போது அங்கு அவர்கள் அரசாங்கத்திடம் பணமில் லை, இதற்காக வழங்கப்பட்ட பணம் முழுவதும் முடிவடைந்து விட்டது எனத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக இன்னமும் நிவாரணம் கிடைக்காத நிலையில் ஆயிரக்கணக்கானோர் இருக்கத்தா ன் செய்கின்றனர். இதேசமயம் மட்ட க்குளியில் ரி.மகேந்திரன் தனது பிரச்சினையை இப்படிச் சொல்கி றார். “;சுனாமி அனர்த்தம் காரண மாக நாம் தற்காலிக குடியேற்ற முகாம்களுக்கு தங்குவதற்காக சென்றோம். சுனாமி ஏற்பட்டு சில காலங்களுக்கு பின்பு நாம் எமது சொந்த இடங்களுக்கு செல்ல முற்பட்ட போது அரச அதிகாரிக ள் அதற்கான அனுமதியை வழங்க வில்லை. அதனால் நாம் இன்னமும் இந்த தற்காலிக முகாம்களிலேயே தங்கியிருக்கின்றோம்.மகேந்திரனின் கூற்றின்படி சுனாமியால் பாதிக்கப்ப ட்ட மக்களை தமது சொந்த இடங் களில் குடியேற்ற அரசாங்கம் விடு வதாக இல்லை. காரணம் கேட்டால் கடற்கரையிலிருந்து 300 மீற்றர் தூரம் வரையில் எவரும் குடியிரு க்க கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவிக்கி றது. இப்படி கூறும் அரசாங்கம் அவர்கள் கூறிய தூரத்துக்குள் உல்லாச விடுதிகளை மட்டும் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இவை கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலேயே அமைக்கப்பட்டுள்ளதுடன் இது குறி த்து அரச அதிகாரிகளிடம் கேட்டா ல் “மீண்டும் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அதனை இவ்விடுதிக ளை நடத்துவோரால் ஈடுசெய்ய முடியும்.” என்று தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நக்பர் இவ்வாறு கூறுகிறார்:- இம்மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுள் 55 வீத மானோருக்கே அரசினால் வழங்க ப்பட்ட உதவிகள் கிடைக்கப்பெற் றன. இவ்வுதவிகள் கிடைக்காதவர் கள் இன்னமும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இது போன்றே இம் மக்களின் நலன்களுக்காக மேற் கொள்ளப்பட்ட சுகாதாரச் செயற ;பாடுகள் 60 வீதமளவிலும் வீதி புன ரமைப்பு நடவடிக்கைகள் 40 வீதமளவிலும் மீன்பிடித் தொழிலை செய்வதற்கான வசதி வாய்ப்புக்கள் 60 வீதமளவிலும் விவசாய நடவடி க்கைகள் 20 வீதமளவிலும் மற்றும் அடிப்படைத் தேவைப் பூர்த்தி 25 வீதமளவிலுமே மேற்கொள்ளப்பட் டுள்ளன என்கிறார். இவ்வாறான நடவடிக்கைகளினூடாக சுனாமி யால் அழிவுற்ற பொது நல விடயங் களின் அபிவிருத்திக்கு பணம் செல வளித்திருக்கும் அளவுக்கு மக்களி ன் அடிப்படைத் தேவைகளை நிவர்த் தி செய்ய தவறியிருக்கிறது அரசாங்கம். உண்மையில் ஒரு நாட்டின் பொது நலத் தேவைகளை மட்டும் அபிவிருத்திசெய்வதன் மூல ம் ஒரு நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியுமா என்பது கேள்விக் குறியே. தனிமனித அடிப்படைத் தேவைகளும் ஒரு நாட்டின் அபிவி ருத்தியில் பங்குகொள்கின்றது அல் லவா? அந்த வகையில் எமது நாட்டு அரசாங்கம் நாட்டின் பொது நலத் தேவைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயற்பட்டிருப்பதை மேற் குறிப்பிட்ட மக்களின் கூற்றுக்களில் இருந்து அறிய முடிகின்றது. பொது உடமைகளை அபிவிருத்தி செய்வ தென்பது மிகவும் முக்கியமான விட யமே. ஆயினும் தனிமனித அடிப் படைத் தேவைகளிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.அதே நேரம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் முகமாக தற்காலிக முகாம்களை மூடிவிடுவதுடன் அங்கு தங்கியிரு ந்த மக்கள் அனைவரையும் ஒரே முகாமுக்குள் கொண்டுவர ஏற்பாடு கள் நடைபெறுகின்றன. நிர்வாகச் சீர்கேடுகள் அல்லது சுனாமி முகா மைத்துவ குறைபாடுகள் காரணமா க இன்னும் நிவாரணத்துக்கு மக்கள் அலைந்து கொண்டிருக்கி றார்கள். இந்த நிலையில் முகாம் களை மூடுவது குறித்து அரசு எத்த கைய நடவடிக்கைகளை எடுக்க மு டியும்என்பதையும் கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment