Thursday, November 15, 2007

அரசியலை தீப்பிழம்பாக்கியுள்ள அநுராதபுரம் தாக்குதல்

மேனகா மூக்காண்டி
நாள் முழுவதும் தொடர்ந்து மழைபெய்த போதிலும் எமது நாட்டு அரசியல் குளிர்ச்சியடைவதாக தெரியவில்லை. அமைச்சர் மிலிந்த மொரகொடவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை யில்லாப் பிரேரணை எனும் நெருப்புத் தணல் அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தற்காலிகமாக அணைந் துபோயுள்ளது. ஆனால் இத்தாக்குதல் தற்போது அரசியலைத் தீப்பிழம்பாக்கி யுள்ளமைதான் அடுத்தபிரச்சினையாகும்.
கடந்த வாரமளவில் யால சரணாலயத்தில் வைத்து அரசபடையினருக்கு எதிராக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா னது தெற்கில் மேற்கொள்ளப்பட்ட முதலா வது கெரில்லாத் தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டது. தொப்பிகலையிலிருந்து தப்பிச்செல்லும் புலி கெரில்லாக்களாலே யே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர்; குறிப்பிட்டிருந்தார்.இத்தாக்குதலின் வடு மாறுவதற்குள் அ நுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீது தரை மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமா கவும் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இலங்கையின் அரசியலில் மிகக் கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இத்தாக்குதல் அரச மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் சற்றும் எதிர்பாராதவகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்குகளில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் ஏற்பட்டிருக்கும் அளவிடமுடியாத சேதங்கள் மூலம் இலங்கையின் பாதுகாப்புத்துறையின்; கவனயீனம் தெ ளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. கிழக்கில் இருந்த இறுதி புலி உறுப்பினரை யும் விரட்டிவிட்ட சந்தோஷத்தில் விழாக் கொண்டாடிக் கொண்டிருந்த பாதுகாப்புத் துறைக்கு இத்தாக்குதல் பேரிடியே அன்றி வேறில்லை. இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு புலிகள் துவண்டு போய்விட்டனர் என்றே தெரிவிக்கப்பட்டது. புலி உறுப்பினர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பகுதிக் காடுகளில் மறைந்து இருப்பதாகவும் அதனால் படையினரின் அடுத்த இலக்கு அப்பகுதிகளே என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர்கள் எங்கிருந்து இவ்வாறான தாக்குதல்களை ந டத்தியுள்ளார்கள் என்பதற்கான விளக்கத்தி னை பொறுப்பு மிக்க அதிகாரிகளே கூற வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பாக அக்கறைகொள்ள வேண்டியவர்கள் விழிப்புடன் இருந்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியான விடயமே. இந்த கேள்வி யால சரணாலயத்தில் நடத்தப்பட்ட தாக் குதலில் இருந்தே எழுவதாகும். இது குறித்து உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களை இங்கு நாம் ஒரே பார்வையில் கொண்டுவருகிறோம்.அரச பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல :- விடுதலைப் புலிகளின் விமானப்படை மற்றும் தரைப்படையினர் அநுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது தொடுத்த தாக்குதலை நாம் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. வடக்கில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள புலிகள் இவ்வாறான தாக்குதல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் :- கடந்த 1987 ஆம் ஆண்டுக்கு பின் கரும் புலிகளால் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் இது. இவ்வாறான தாக்குதல்கள் தொடரும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் படைத்தரப்புக்கு இது போன்ற அதிர்ச்சிகள் இன்னும் காத்திருக்கின்றன. ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண:-நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட் டுவிட்டது என்று அரச அதிகாரிகள் தெ ரிவித்திருந்தனர். ஆனால் புலிகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் தா க்குதல்களுக்கும் அதனால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கும் தற்போது பொறுப்பு கூ றுபவர்கள் யார்? அநுராதபுரத்தில் புலிகள் தாக்கியபோது அரசாங்கத்தால் கொள் வனவு செய்யப்பட் மிக் விமானங்கள் எங்கே? ராடார்களுக்கு என்ன நடந்தது? விமான நிலையங்களுக்கு மேலாக ஒரு பறவையைக் கூட பறக்க விடமாட்டோம் என்று மார்த்தட்டியவர்களின் கூற்றுக்கு என்ன நடந்தது? இவற்றிற்கெல்லாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் விமானப்ப டைத் தளபதியுமே பொறுப்பு கூற வேண்டும். இவர்களால் ஊடகங்களையும் மக்களையும் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ :-இத்தாக்குதல்களைக் காரணங்காட்டி ப டையினரால் வன்னிப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் படையெடுப்பு நடவடிக்கைகள் கைவிடப்படவும் மாட்டாது. மிக் - 27 ரக விமானக் கொள்வனவு தொடர்பாக என்மீது நேரடியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்க ளைச் சுமத்தும் எதிர்க்கட்சியினரின் ஆட்சிக் காலத்திலேயே புலிகளால் பல்வேறுபட்ட ஆயுதங்கள் கொள்வனவும் செய்யப்பட்டன. பலமும் அப்போது தான் அதிகமாக இருந்தது. இது பற்றி எதிர்க்கட்சியினர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஜே.வி.பி. தலைவர் விமல் வீரவன்ச :-அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலைக் காரணங் காட்டி மீண்டும் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பிக் குமாறு புலிகளுடன் நட்பு பாராட்டும் ச க்திகள் அரசை வற்புறுத்தக்கூடும். ஆ னால் அரசு அதற்கு இணங்கக் கூடாது. விரயமானதும் ஆபத்தானதுமான நடவ டிக்கைகளில் இருந்து விலகி பாதுகாப்புப் படைகளில் தியாகத்துக்கு நிகரான தியாகம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். பிரான்ஸ் பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தரணி தலைவர் ஜான் லூவிஸ் :-விடுதலைப் புலிகள் அமைப்பை முழு மையாக இல்லாதொழிக்க முனைவது என்பது இலங்கைக்கு எவ்வகையிலும் சாத்தியமற்றதொன்றாகும். விமானப்படை முதலான சகல படைகளி ன் பலத்தையும் விடுதலைப் புலிகள்இயக்கம் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அமைப்பு தீவிரவாதத்தை முத ன்மையாகக் கொண்டு அமைந்த அ மைப்பாகும். ஆதனால் அவர்களை தோ ற்கடிப்பதென்பது சற்று சிரமமான விடயமே ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரதும் கருத்துக்கள் இவ்வாறிருக்க அரச படைத்தரப்பினர் இத்தாக்குதலின் பின்னர் தாக்குதலிலும் கொடுமையான செயற்பாடு ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தாக்குதலின் போது பலியான புலி உறுப்பினர்களின் சடலங்களை படையினர் நிர்வாணமாக மக்களின் பார்வைபடும் வகையில் கொண்டுசென்றுள்ளனர்.மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தியவர்கள் என்றாலும் அவர்களின் சடலங்களுக்கு உரிய மரியாதையை செலுத்தியிருக்க வேண்டும்.
இதே சமயம் அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீதான புலிகளின் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் 21 புலி உறுப்பினர்களும் எவ்வாறு புகுந்தார்கள்? என்ற கேள்வியுடன் இரகசிய பொலிஸார் இவ்விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப்படைத்தளத்திற்கு நுழைவதற்கு பாதுகாப்பு பிரிவினர் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டினரால் மட்டுமன்றி வெளிநாட்டினரதும் பேச்சுக்கு காரணமாகியுள்ள இத்தாக்குதல் அரசியலில் பாரிய சூறாவளியை ஏற்படுத்த வழிசமைத்துள்ளது. அரசில் உள்ள ஒருசிலர் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தையை நடத்தி இப்பிரச்சினைக்கு முடிவு காணுமாறும் இன்னும் சிலர்; யுத்தத்தால் அவர்களை தோற்கடிப்பது தவிர வேறு வழியில்லை என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரம்புக்கணையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்ட நவம்பர் மாதம் பிறப்பதற்குள் புலிகளால் அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் நவம்பர் தீர்வுக்கு என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு கூற முடியாது.
அதேவேளை எதிர்வரும் நவம்பரில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார். அவ்வுரை விடுதலைப் புலிகளை யுத்தத்தை நோக்கி இட்டுச் செல்லுமா அல்லது அவர்கள் சமாதானத் தீர்வை வெண்டி நிற்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள உலகமே காத்திருக்கிறது. மஹிந்தவின் யுத்தத்தின் மீதான ஆர்வமும் விடுதலைப் புலிகளின் அண்மைய தாக்குதல்களும் நிச்சயம் இலங்கைக்கு நல்லதொரு எதிர்காலம் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது.

No comments: