தகவல் தொடர்பு ஊடகங்கள் செய்திகளையும் தகவல்களையும் வழங்குவதில் பொதுமக்களுடன் பாரிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. உலகத்தை உள்ளங்கையில்தரும் பொறுப்பினை செவ்வனே செய்வதற்கு இலத்திரனியல் ஊடகங்களான வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பன முக்கிய பங்கினை வகிக்கின்றன.
கடந்த 25 வருட காலப்பகுதியில் இந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பன பொது மக்களிடையே பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளன. அரச தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் என்று இரண்டு பட்டிருந்தாலும் அவை பொது விடயங்களையும் உரிய சூழ்நிலைகளில் பொது மக்களுக்கு தேவையான செய்திகளையும் வழங்கி வருகின்றன.வானொலி ஒலிபரப்புச் சேவை
நிகழ்கால வானொலி ஒலிபரப்புச்சேவையின் பரிமாணமானது பாரியளவிலான விஞ்ஞான தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய புதியதொரு சமூக வளர்ச்சியாகவே காணப்படுகிறது. ஏனைய ஊடகங்களுடன் ஒப்பிடுமிடத்து வானொலிச் சேவையானது பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் மீறி வெற்றியடைந்ததொன்றாகும். இவ்வானொலிச் சேவையானது பிரதான 03 காரணங்களை உள்ளடக்கியே வளர்ச்சியடைந்துள்ளன. அவையானவை:-
(01) உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்ததுடன் கடல்தாண்டிச் செல்லக்கூடிய ஊடகத்தின் தேவைப்பாடு முக்கியமாக இருந்தமை. (02) ஒவ்வொருவருக்கிடையே ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றம். (03) வயர்லஸ் டெலிகிராப் மற்றும் தொலைபேசி சேவை தொழில்நுட்பம் வாய்ந்த ஊடகமாக வளர்ச்சியடைந்தமை.
மேற்படி காரணங்களை முதலாகக் கொண்டதன் பின்னரும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிய பின்னருமே பிற்காலத்தில் வானொலி ஒலிபரப்புச்சேவை ஊடகம் கண்டுபிடிக்கப்பட்டது.
பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளுக்கு தகவல் பரிமாற்றம் மிக முக்கிய தேவையாக காணப்பட்டது. ஆரம்பத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக மக்கள் அத்தகவல்களை எடுத்துக்கொண்டு சென்றார்கள். இதில் பல பிரச்சினைகள் தோன்றவே மேற்படி தகவல் பரிமாற்றத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டது. இக்காலப்பகுதியி;ல் நெப்போலிய மன்னரால் (ளுநிஅphழசநகழச ஊழஅஅரniஉயவழைn) எனும் தகவல் பரிமாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. சுமார் ஒவ்வொரு 10 மைல்; தூரங்களிலும் 224 தகவல் மையங்களை அமைத்து அவற்றிலிருந்து தகவல்களை பரிமாற்றுவதே நெப்போலிய மன்னனின் தகவல் பரிமாற்று முறையாகக் காணப்பட்டது.
மேற்படி தகவல் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் தூண்களில் குறித்த சில மனிதர்கள் ஏறிநின்று ஏனைய தகவல் மையத் தூணின் மீது நிற்கும் மனிதர்களுக்கு தமது கைகளால் குறித்த சில எழுத்துக்களையும் சைகைகளையும் வரைந்து காட்டப்பட்டன. அந்த எழுத்துக்கள் குறிக்கும் தகவல்களை விளங்கிக் கொள்ளும் அவர்கள் அதனை மற்றைய தகவல் மையத் தூண் மீது நிற்கும் மனிதனுக்கு அவ்வாறே தெரிவிப்பர். இந்த முறையிலேயே தகவல் பரிமாற்றம் இடம்பெற்றது. இம்முறையே டெலிகிராப் (வுநடநபசயிh) ஊடகத்துக்கு அடிப்படையாக விளங்கியது.
சுமார் 1830 ஆண்டுகாலப்பகுதியிலேயே மேற்படி டெலிகிராப் (வுநடநபசயிh) முறை தொடர்பான அறிவு விஞ்ஞான தொழில்நுட்ப வள்ர்ச்சியில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எப்.பீ.மோர்ஸ் (கு.டீ.ஆழசளந) என்பவர் நிவ்யோர்க்கிலுள்ள தமது கல்லூரியில் குறித்த சில செயற்;திட்டங்களை அமைத்து அங்கிருந்து சுமார் 10 மைல் தூரத்திற்கு இடைப்பட்ட பிரதேசங்களில் தகவல்களைப் பரிமாற்றும் முறையொன்றை கையாண்டார்.
இம் முறையானது 1844 மே மாதம் 24 ஆம் திகதி அரச அனுமதியுடன் முதற் தடவையாக வோஷிங்டன் மற்றும் பெல்டிமோர் ஆகிய இரு பிரதேசங்களுக்கிடையே பரிமாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. வர்த்தகம, இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பல அரச நடவடிக்கைகளுக்கு மோர்ஸின் இத்தகவல் பரிமாற்றுமுறை உபயோகிக்கப்பட்டது.
1866 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அட்லாண்டிக் கடற்பரப்பினூடாக கேபில்கள் பொருத்தப்பட்டு கடலுக்கூடாக மேற்படி தகவல்கள் அனுப்பப்பட்டன. 1876 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கிரகம்பெல் மூலம் வயர்களினூடாக மனித குரல்கள் அனுப்பப்பட்டன. அதன் பின்னரே வயர்லஸ் டெலிகிராப் தகவல் தொடர்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
1888 ஆம் ஆண்டு ஹென்ரிஷ் ஹர்டிஸினால் அலைவரிசையும் அவற்றை உற்பத்தி செய்யும் முறைமையும் கண்டுபிடிக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குகுல் மோ மார்க்கோனியினால் மேற்படி அலைவரிசைகள் மூலம் எவ்வாறு ஒலியினை அனுப்புவது என்பது குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளின் பின்னர் அதன் மூலம் தகவல்கள் பரிமாற்றப்பட்டன.
20ம் ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலேயே அலைவரிசைகள் மூலம் தகவல் பரிமாற்றும் முறை ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் அது கடற்படை, விமானப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மேற்படி வயர்லஸ் டெலிகிராப் இயந்திர உபயோகத்தின் பின்னர் வானொலி (சுயனழை) டெலிகிராப் இயந்திரம் உருவாக்கப்பட்டது. ரெஜினால் பெஸ்ஸெனட் (சுநபiயெட குநளளநனெந) எனும் நபரால் வானொலி இயந்திரம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சைகைகளுக்குப் பதிலாக மனித குரல்களை அலைவரிசைகள் மூலம் பயணிக்க வைப்பதற்காக டிரான்ஸ் மீட்டர் (வுசயnஉந ஆநநவநச) ஒன்று உபயோகப்படுத்தப்பட்டது. இவருடைய இம்முயற்சியானது 1906 ஆம் ஆண்டு ப+ர்த்தியடைந்ததுடன் 1906 ஆம் ஆண்டு நத்தார்ப் பண்டிகை தினத்தன்று இரவு வெற்றியடைந்தது. அன்றைய தினம் அட்லாண்டிக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலின் டெலிகராப் இயக்குனர்களுக்கு முதன் முறையாக அந்த டெலிகராப் இயந்திரங்களினூடாக மனித குரல்கள் ஒலிபரப்பப்பட்டன. அவ்வியக்குனர்களால் இதனை நம்பமுடியாதிருந்ததுடன் பெரும் வியப்பையும தந்தது. தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்ட ரெஜினால் முதலாவதாக ஒரு பேச்சை மேற்கொண்டார். புpன்னர் பாடலொன்றைப் பாடிக்கொண்டே வயலின் இசைக்கருவியையும் மீட்டினார்.
மேற்படி கண்டுபிடிப்பை அடுத்து வானொலி இயந்திரமானது கடற்படை மற்றும் விமானப்படை நடவடிக்கைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. முதலாம் உலக யுத்தத்தின் போது மேற்படி வானொலிச் சேவை இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அது வரையில் அது பொது ஊடகமாகத் தொழிற்படவில்லை. அமெரிக்காவின் மார்க்கோனி நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் மற்றும் சானோக் ஆகிய இரு என்ஜினியர்கள் அட்லாண்டிக் கடற்பரப்பில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் குறித்த தகவல்களை நிவ்யோர்க்கிலுள்ள தமது நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களாக மக்களுக்காக ஒலிபரப்பினார்கள். மேற்படி தகவல்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் காட்டிய ஆர்வத்தை அவதானித்த சானோக் தமது நிறுவனத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவருக்கு கடிதமொன்றை எழுதினாh.; அக்கடிதத்தில் “வானொலி ஊடகமானது மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது அதனால்; வானொலி இயந்திரங்களை உற்பத்திச்செய்வதால் நாம் கூடிய இலாபம் பெற முடியும்” என குறிப்பிட்டிருந்தார்.
சானோக்கின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத நிறுவனம் அதனைப் புறக்கணித்தது. சில நாட்களின் பின்னர் அந்நிறுவனத்தின் முகாமையாராக பதவி ஏற்ற சானோக் முதலாவதாக தமது கருத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தார். மார்;கோணியின் விஞ்ஞான தொழிநுட்பக் கண்டுபிடிப்பும் சானோக்கின் தேடலும் பொது ஊடகமொன்றை வடிவமைத்தது. இவ்வடிவத்திற்கு ரேடியோ மியூசிக் பொக்ஸ் (சுயனழை ஆரளiஉ டீழஒ) எனும் பெயரும் சானோக்கினால் வழங்கப்பட்டது. மேற்படி சானோக்கின் சுயனழை ஆரளiஉ டீழஒ வடிவமானது 1920 ஆம் ஆண்டு பிராங்க் ஹொட்ராடினால் மேலும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அவருடைய பரிசோதனைகளை அடுத்து வானொலி ஓலிபரப்பு நிலையமொன்றை உருவாக்கிய பிராங்க், வாரத்தில் 2 நாட்கள் இருமணி நேரமாக பாடல்களை ஓலிபரப்புச் செய்ததுடன் உலக மக்களுக்கு தேவையான பல தகவல்களையும் ஓலிபரப்புச் செய்தார்.
பிராங்கின் இவ்விருமணிநேரப் பாடல் ஒலிபரப்பில் மூழ்கிப்போன மக்கள் தொலைபேசி மூலமும் கடிதங்கள் மூலமும் தமக்குப் பிடித்த பாடல்களை ஒலிபரப்புமாறு வேண்டுகோள் விடுத்தாhகள்;.
மேற்படி ஒலிபரப்புச் சேவையின் கேள்வி அதிகரித்ததுடன் வானொலி இயந்திரங்களின் வி;ற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. 1920 ஆம் ஆண்டு முனுமுயு எனும் வானொலி ஒலிபரப்புச் சேவைமூலம் வானொலி இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்போவதாக அறிவி;க்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் ஜனாபதித் தேர்தல் முடிவுகள் வானொலியின் மூலம் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. மேற்படி தேர்தல் முடிவுகளை சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கேட்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படித் தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பப்பட்டதுடன் வானொலி இயந்திரங்களின் விற்பனையும் அதிகரித்தது. அமெரிக்காவில் வானொலி இயந்திரத்திற்கான கேள்வி அதிகரித்ததையிட்டு 1921 ஆம் ஆண்டு வானொலி உற்பத்தி;க்கான அனுமதி 32 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இது 1922 இல் 254 ஆக அதிகரித்தது.
1923 ஆம் ஆண்டில் 500 நிலையான ஒலிபரப்புச் சேவை நிலையங்களும் 1400 சிறு ஒலிபரப்புச் சேவை நிலையங்களும் அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தமது தனிப்பட்ட ஆட்சியை நடத்திவந்த வானொலி ஒலிபரப்புச் சேவை 1940 இன் பின்னர் தொலைக்காட்சியின் வருகை காரணமாக வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. ஆயினும் தளர்ந்து விடாத வானொலி நிலையங்கள் தமது சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தன.இலங்கையில் வானொலிச் சேவையின்ஆரம்பமும் ஒலிபரப்பும் 1921 ஆம் ஆண்டு முதன்முறையாக அமெரிக்காவின் பிட்டர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட வானொலி ஒலிபரப்புச் சேவைகள், தொடர்ந்து வந்த நான்கு ஆண்டுகாலப்பகுதியில் இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டன.
1923 டீடீஊ நிறுவனமானது வானொலிபரப்புச் சேவையின் வளர்ச்சிக்காக சுயாதீன நிறுவனமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1923 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மும்பாய் வானொலி ஒலிபரப்புநிலையம் அமைக்கப்பட்டு மார்க்கோணி நிறுவனத்தினால் கடன்வாங்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. இதனுடனேயே ஜப்பானிலும் வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
பிரித்தானியா, இந்தியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வானொலிச் சேவையின் வளர்ச்சி அதிகரிக்கும் போது இலங்கைக்கும் அதன் தேவை அத்தியாவசியமாக விளங்கியது. மேற்படி வானொலி ஒலிபரப்புச் சேவையின் தேவையை உணர்ந்து பிரித்தானியக் குடியரசினால் 1921 ஆம் ஆண்டு இலங்கையிலும் வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
டெலிகிராப் இயந்திரம் குறித்த பிரதான என்ஜினியராக இலங்கைக்கு வருகை தந்த “எட்மன்ட் ஹாபன்” இது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அச்சமயம் இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டார்.
அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கூட்டங்களை நடத்திய எட்மன்ட் தமது முயற்சியாலும் அனைவரது ஒத்துழைப்பாலும் 1924 ஜூன் 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு உத்தியோகப+ர்வமானமுறையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் திறந்து வைத்தார். செய்திகள், இசைநிகழ்ச்சிகள், அரச அறிவித்தல்கள், அரச அதிகாரிகளின் உரையாடல்கள் என்பன வானொலியில் ஒலிபரப்பப்பட்டதுடன் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி கலையகம் ஒன்றை அமைத்து வானொலி ஒலிபரப்புச் சேவையில் வளர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது 160 ஊழியர்களைக் கொண்டிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே ஒலிபரப்புக்களை மேற்கொண்டது.
1930 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேலும் பல வளர்ச்சிகளைக் கண்;ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பல்வேறுபட்ட தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருந்தது. இக்காலப்பகுதியில் டீடீஊ நிறுவனமும் அதன் என்ஜினியர்களும் இந்தியாவில் பல புதிய வானொலிச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். அச்சமயம் இலங்கையிலும் அச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1940 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச சேவைகள் மற்றும் வர்த்தக சேவைகள் தொடர்பான தகவல்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டன. அத்துடன் பௌத்தசமயம் ,இந்துசமயம், கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம்களுக்குச் சிறப்பான தினங்களில் அம்மதத்திற்குரிய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டன.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் வானொலி ஒலிபரப்புச் சேவையை முறையாகக் கொண்டு நடாத்துவதற்காக அரச ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் அதில் வானொலி ஒலிபரப்பு நிலையத்தின் நிர்வாகம், கலைஞர்களைத் திருப்திப்படுத்தல், மற்றும் நிகழ்ச்சிநிரல்களும் அவை ஒலிபரப்பப்படும் நேரங்களும் தீர்மானிக்கப்பட்டதுடன் தேசிய ஊடகமாக வானொலியினைப் பிரகடனப்படுத்துதல் குறித்தும் அவ்வாணைக் குழுக்கூட்டங்களில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.
1960 ஆம் ஆண்டுகாலப் பகுதியின் பின்னர் அரச தலைவர்களின் உரைகள், அரச நிகழ்ச்சிகள், சமயநிகழ்ச்சிகளுக்காக வானொலி உபயோகப்படுத்தப்பட்டதுடன் 1965 ஆம் ஆண்டு இலங்கை வானொலி ஒலிபரப்புச் சேவையானது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னரும் அரசியல் நிகழ்வுகள், கூட்டங்கள், அரசியல் உரைகள் என்பனவும் ஒலிபரப்பப்பட்டன. 1976 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் இந்;நிலை தொடர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1994 ஆம் ஆண்டு சிரச (ளசையளய) எனும் பெயருடைய தனியார் வானொலி ஒலிபரப்புச் சேவையொன்று கு.ஆ எனும் அலைவரிசையினூடாக ஆரம்பிக்கப்பட்டதுடன் அதில் நவீன தொழிநுட்பமுறையினை உபயோகித்தல், நேரடி ஒலிபரப்புக்கள் மேற்கொள்ளப்படல், தொலைபேசி மூலம் நேயர்கள் தொடர்பு கொண்டு உரையாற்றக்கூடிய வசதிகளை அமைத்துக் கொடுத்;தல் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தனர்.
தொலைக்காட்சியின் வருகை காரணமாக வானொலியுடன் தொடரப்பட்டிருந்த நேயர்கள் மீண்டும் அதனைச் சுற்றி வட்டமிடக்கூடிய வகையில் இவ்வானொலி அலைவரிசை செயற்பட்டது. இது தவிர மேலும் பல வானொலி அலைவரிசைகள் உருவாக்கப்பட்டன. அவையாவன:- ஹிரு (ர்சைர) கு.ஆ, தரு (வுhயசர) கு.ஆ, ஸ்ரீ (ளுசi) கு.ஆ. லக்ஹண்ட (டரஉம hயனெய) , சூரியன் (ளுழழசயைn) கு.ஆஇ சக்தி (ளூயமவாi) கு.ஆஇ மற்றும் இசிர (ஐளசைய) கு.ஆஇ என்பன அவற்றுள் முதலிடங்களைப் பெற்றனவாகக் காணப்பட்டன.
இன்றைய நாள்வரை மேற்குறிப்பிட்ட வானொலி ஒலிபரப்புச் சேவைகளைத்; தவிர மேலும் பல வானொலி ஒலிபரப்புச் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய தொழிநுட்பம் மிக்க நிகழ்ச்pசகள் இடம்பெறுகின்றன. புதிய தொழிநுட்ப வசதி முறைகளின் கண்டுபிடிப்புக்கள் காரணமாக மென்மேலும் பல வானொலி ஒலிபரப்புச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதுடன் அவை மக்கள் மத்தியி;ல் பிரபல்யமடையவும் காரணமாக அமைகின்றன.
தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவை
வானொலி ஒலிபரப்புச் சேவையைப் போன்றே தொலைக்காட்சியின் அறிமுகத்திற்கும் நீண்டகால பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதைனைகளின் பிரதிபலனாகவே தொலைக்காட்சி எனும் மக்கள் ஊடகம் வெளிப்பட்டது.
தொலைக்காட்சி ஊடகமானது ஸ்கேனிங் எனும் தொழிநுட்கத்தின் வாயிலாகவே உருவாக்கப்பட்டது. இந்த ஸ்கேனிங் தொழிநுட்பமானது வீடியோ கமராக்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
1884 ஆம் ஆண்டு போல் நிப்கோல் என்பவராலேயே இந்த ஸ்கேனிங் தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் கண்டுபிடிப்பு குறித்து பரிசோதனைகளை நடத்திய பிரித்தானிய நாட்டு என்ஜினியரான ஜோன் லொகி பெயார் அதனை மேலும் விரிவான முறையில் பரிசோதனைகளுக்குள்ளாக்கி அதில் 8 ஸ்கேனிங் தொழிநுட்ப இரேகைகளைப் பயன்படுத்தியதுடன் 50 உருவப்படங்களையும் உள்ளடக்கினார். தாம் உள்ளடக்கிய உருவப்படங்களை ஒரு திரையில் பிரதிபலிக்கச் செய்த அவர் அத்திரையில் உருவப்படங்களை விட நிழல்களையே அதிகளவில் கண்டார்.
1929 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் டீடீஊ நிறுவனம் தமது பரிசோதனைகளுடன் கூடிய ஒளிபரப்பை மேற்கொண்டது. அப்போது ஸ்கேனிங் இரேகைகளின் எண்ணிக்கை 8 இலிருந்து 30 ஆக முன்னேற்றமடைந்திருந்தது. ஆயினும் உருவப்படங்கள் தெளிவற்றும் அசைவுத்தன்மை உடையனவாகவும காணப்பட்டன. முன்னரை விட ஓரளவு தெளிவான படங்கள் காணப்பட்ட போதிலும் ஒரு செக்கனுக்கு ஒளிபரப்பப்படும் படங்களின் எண்ணிக்கை 12 ஆக காணப்பட்டதால் அவை அசைவுத் தன்மையைக் கொண்டிருந்தன.
இமி ( ஐஅi ) நிறுவனம் மற்றும் மார்க்கோணி வயர்லஸ் டெலிகிராப் ( ஆயசமழni ஏசைடநளள வுநடநபசயிh ) நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து தொலைக்காட்சியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் ஸ்கேனிங் தொழிநுட்ப இரேகைகளின் எண்ணிக்கையை 205 ஆகவும் ஒரு செக்கனுக்கு ஒளிபரப்பப்படும் படங்களின் எண்ணிக்கையை 25 ஆகவும் இதிகரிக்கச் செய்தன.
இவர்களின் பரிசோதனைகளை அடுத்து ஜோன் லொகீ பெயார் 240 ஸ்கேனிங் தொழிநுட்ப இரேகைகளையும் ஒரு செக்கனுக்கு 25 படங்களையும் ஒளிபரப்பினார்.
டீடீஊ நிறுவனமானது மேற்படி இரு முறைகளையும் உபயோகப்படுத்திக் கொண்டதுடன் ஜோன் லொகீ பெயாரின் கண்டுபிடிப்பு முறையை 1937 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை உபயோகப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் தொலைக்காட்சி ஒளிபரப்பின் தந்தையாக ஜோன் லொகீ பெயாரே முன்மொழியப்பட்டார். ஆயினும் தொலைக்காட்சி ஒளிபரப்பானது தனிநபர் ஒருவரினால் ஒளிபரப்பப்பட முடியாததொன்றாகும்.
1928 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளிலேயே ஜோன் லொகீ பெயாரினால் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் அமெரிக்காவில் தொலைக்காட்சி உபயோகப்படுத்தப்பட்டதுடன் அதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்ட் வெல்ட் மக்களுக்கான உரைகளையும் நிகழ்த்தினார். ஆயினும் மக்கள் மத்தியில் அதுவரையில் இத் தொலைக்காட்சி இயந்திரம் பிரபல்யமடைந்திருக்கவில்லை.
அன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்பான அறிவு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்காமையும் தொலைக்காட்சி உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டிருக்காமையும் அது பிரபல்யமடைந்திருக்காமைக்கு காரணங்களாக விளங்கின.
1941 ஆம் ஆண்டு அமெரிக்காவின் குஊஊ நிறுவனத்திற்கு தொலைக்காட்சிகளை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 2 ஆம் உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தியுடன் தொலைக்காட்சி உற்பத்தியும் வளர்ச்சியடைந்தது.
1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவில் 70 தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 10 இலட்சம் தொலைக்காட்சி இயந்திரங்கள் உபயோகத்தில் இருந்துள்ளன. 1975 ஆம் ஆண்டின் பின்னர் ஜப்பான் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் சந்தைக்குள் பிரவேசித்ததும் தொலைக்காட்சிகளின் விலைகளும் குறைவடைந்து அவற்றின் உற்பத்திகளும் அதிகரித்தன.இலங்கையில் தொலைக்காட்சியின்அறிமுகமும் ஒளிபரப்பும்
1979 ஆம் ஆண்டு இலங்கையில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்துவதற்காக இலங்கை அரசு ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது. இப்பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலகட்டத்தில் இலங்கையில் “சுயாதீனதொலைக்காட்சிசேவை” எனும் தனியார் ஒளிபரப்புச் சேவையொன்று ஷான் விக்கிரமசிங்க எனும் நபரால் பன்னிப்பட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இத் தொலைக்காட்ச்p சேவையானது குறித்த சில பிரதேசங்களில் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒளிபரப்பை மேற்கொண்டதுடன் அது ஆரம்பிக்கப்பட்டு 2 மாதகாலம் முடிவடைந்ததும் அந் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பாக அரசுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அந்நிறுவனம் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்காலத்தில் ஐ.டி.என் (ஐவுN) எனும் பெயரில் இயங்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையே அதுவாகும்.
மேற்படி தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவைக்கு இணையான தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்க எண்ணிய இலங்கை அரசாங்கம் இலங்கை வானொலி ஒலிபரப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது.
மேற்படி பேச்சுவார்த்தையின் பின்னர் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு அவசியமான ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக நாரஹேன்பிட்டியில் பயிற்சி நிலையமொன்றையும் அமைத்தனர்.
1982 பெப்ரவரி 15 ஆம் திகதி ஜப்பான் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதலாவது ஒளிபரப்பாக பிரித்தானிய மகாராணியார் இலங்கைக்கு வந்த சம்பவத்தை ஒளிபரப்புச் செய்தனர்.
இதன் முதலாவது தலைவராக எம்.ஜே. பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இதற்கான கலையகம் ஒன்று 1989 ஜுன் 2 ஆம் திகதி 20 இலட்சம் ரூபா பெறுமதியான சாதனங்களுடன் அமைக்கப்பட்டதுடன் இதில் ஒரே நேரத்தில் 12 பேர் செயற்படக்கூடியதாக அமைந்திருந்தது.
1992 ஏப்ரலில் எம்.டீவி, என்ற தனியார் நிறுவனம் தொலைக்காட்சி ஓளிபரப்புக்களை ஆரம்பித்தது. 1995ன் பிற்பகுதியில் அதன் ஒளிபரப்புக்களை விஸ்தரித்ததுடன் பின் சிரச டீவி, சக்தி டீவி, என்பனவற்றையும் ஆரம்பித்தது. சக்தி டீவி தனக்கென ஒரு பாதையை வகுத்து நிகழ்ச்சிளை வழங்கி வருகின்றது. வட-கிழக்கு உட்பட நாட்டின் எல்லாப் பக்கங்களுக்கும் தனது சேவையை மேற்கொண்டு வருகிறது. யாழ்க்குடாநாட்டில் ஒளிபரப்பாகும் ஒரே ஒரு தனியார் தொலைக்காட்சி இது மட்டும்தான். இனங்களினது பண்பாட்டுப் புரிதலினாலும் நம்பிக்கையை பேணுவதினாலும் இலங்கையில் மட்டுமல்லாது சர்வசே ரீதியிலும் பிரபல்யம் அடைந்;துள்ளது.
1993 ஜூலை 21ம் திகதி டீ.என்.எல். என்ற பெயரில் இன்னுமொரு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு பீ.பீ.சி. யும் ஸ்டார் ஸ்போட்ஸ் ( ளுவயச ளுpழவள )உம் சேர்ந்து ஈ.டீ.வி.( நு.வுஎ ) என்ற பெயரில் ஒரு ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
ஈ.ஏ.பீ. எதிரிசிங்க கூட்டு வியாபார நிறுவனம் 1996 மார்ச் 26ம் திகதி ஈ.டீ.வி. சேவையை விலைக்கு வாங்கியது. அதிலே வெளிநாட்டுச் செய்திகளையும், மேலைத்தேயத் திரைப்படங்பளையும் ஒளிபரப்பியது. இதன் பின்னர் 1997 மார்ச் 16ம் திகதி; சுவர்ணவாஹினி என்ற பெயரில் சிங்கள மொழி மூல தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்து இன்றுவரை ஒளிபரப்பி வருகின்றது.
இப்பொழுதுள்ள பொருளாதார நிலைமையில்; இலத்திரனியல் ஊடகங்கள் பாரிய போட்டிகளுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்சேல்ல வேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. இலத்திரனியல் ஊடகங்களின் வர்த்தக நோக்கங்களுக்காகவும், வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் கூடுதலாக இளைஞர்களைக் குறித்தே நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்பப்படுகின்றன.
உலகம் மாறிவரும் இந்தக் காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடகங்களின் தேவையும், கேள்வியும் அதிகரிதிதுள்ள நிலையில் ஊடகங்கள் பொது மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் செயற்பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது கட்டுரையின் மூலம்.
ஆங்கில எழுத்துக்களினாலவற்றை சரி செய்து விடுங்கள். யுனிக்கோட் வடிவங்களிலேயே இருக்கின்றன.
Post a Comment